புதன், 1 ஜனவரி, 2014

அருகம்புல்(சைனடோன் டாக்டிலோன்)

சைனடோன் டாக்டிலோன்
Cynodon dactylon
[அருகம்புல்]
Family: Graminae
மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்தில்
சித்த மருத்துவத்தில் சஞ்சீவியாக பயன்படும் மூலிகை தான் அருகம்புல்.வருடம் முழுவதும் பூக்கும் இயல்புடையது,பூர்வகுடிமக்களின் அனைத்து சடங்குகளிலும் அருகம்புல் இடம்பெறும். சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல்லை செருகி வைத்து வழிபடுகிறார்கள்.அருகம்புல்லை வழிபட்டால் மனிதர்களின் பாவங்களை துடைப்பதாக நம்புகிறார்கள். முதலில் ஒருசெல் தாவரமாகத் தோன்றி வளர்ந்த அகரம்புல் தற்போது அருகன் புல் என்று மருவிவிட்டது.
முதலில் தோன்றியதால் அதிகத் திறன்மிக்கதாகவும், மற்ற பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கும் திறனுடையதாகவும் உள்ளது இந்த அகரம்புல். மாட்டுச்சாணத்தில் இரண்டாவது நாளே கிருமிகள் மற்றும் பூச்சிகள் உண்டாகும். ஆனால் நம் பெண்கள் மார்கழி மாதத்தின் காலை நேரங்களில் கோலம்போட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து ஒரு அருகம்புல் குத்திவைத்தால் கெடாமல் எத்தனை நாளாயினும் அப்படியே உலர்ந்து போகிறது.
அனல்வீசும் கோடையிலும் இப்புல்மேல் பட்டுவரும் காற்று குளிர்ந்துவிடும். ஒருமுறை தோன்றி வளர ஆரம்பித்தால் அப்பகுதி முழுவதும் ஆழமாகவும், அகலமாகவும் பரவி நிலைத்துவிடும். எத்தனை ஆண்டுகள் நீர் கிடைக்காமல் வற்றினாலும் அழிந்துபோவதில்லை. மீண்டும் நீர்பட்டுவிட்டால் செழிக்க ஆரம்பித்துவிடும். அருகம்புல் வளரும் நிலத்தை நீரால் அரிக்க இயலாது. வறண்ட நிலம் வெப்பத்தினாலும் வெடிக்காது. எனவே இப்புல்லால் வரப்பு அமைத்துத் தான் நெல்வயல் அமைக்கிறார்கள்.
இந்தக் கருத்தைத் தான் ஔவையாரும்,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்
என்று தொழில் நுட்பமாகப் பாடியிருக்கிறார். விவசாயக் கல்லூரி இல்லாத அக்காலத்திலேயே இவை போன்ற உழவர் தொழில்நுட்பங்கள் தமிழர்களால் பாடப்பட்டு அவை மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.
ஏரிக்கரைகளில், சாலையோரங்கள், இருப்புப்பாதைச் சரிவுகள் போன்ற இடங்களில் அருகம்புல்லை வளர்த்துவந்தால் நாளடைவில் வெள்ளத்தால் அடித்துச் செல்லாமல், வெப்பத்தால் வெடித்துவிடாமல் கெட்டிப்பட்டுவிடும். அணுகுண்டு போட்டு இந்தப் புவியில் எந்தவொரு உயிரும் விளங்காமல் செய்தாலும் அருகம்புல் மட்டும் மீண்டும் வளர்ந்து புல்லாகிப் பூடாகிப் பரிணாமவளர்ச்சியைத் தொடங்கிவைத்துவிடும் என்று அறிவியலாளர்கள் கண்டுணர்ந்துள்ளனர். தமிழகத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டுவைப்பார்கள். இது மூடப்பழக்கமல்ல. புற ஊதாக் கதிர்வீச்சு கிரகண நேரத்தில் அதிகமாயிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவே நீரில் அருகம்புல்லைப் போட்டுவைப்பார்கள்
முழுதாவரமும் துவர்ப்பும்கசப்புமான சுவை கொண்டது. வெப்பத்தன்மை மிகுந்தது. இலைகள்வெட்டுக்காயங்களில் ஏற்படும் இரத்தப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. வெட்டுக்காயத்தை விரைவில் உலர்த்திவிடும்... என்கிறது அகத்தியர் குணபாடம். இதன் பூக்கள் ஈறுகளிலிருந்து இரத்தம் வருவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வெள்ளைப்படுதல்மூட்டுவலி போன்றவை இதனால் குணமாகின்றன. பல ஆங்கில மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டதால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு, நீரடைப்பு, நச்சுத்தன்மை, நீர்பிரியும் போது உண்டாகும் எரிச்சல், மூலக்கடுப்பு,  மருந்துகளின்,ஒவ்வாமை தீர்ந்து நலம் பெறலாம்.
சில்லிமூக்கு ஒழுகும்போது அருகம்புல்சாறு இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உறிஞ்சால் இரத்தம் வடிவது நிற்கும்.
அருகம்புல் ஜூஸ் சிறுநீரில் இரத்தம் போவது,வாந்தி இவற்றுக்கும்   மற்றும் கண் இமைப்படல அழற்சியில் சொட்டுமருந்தாக பயன்படுகிறது.அருகம்புல் கசாயம் சிறுநீர்பெருக்கியாகவும்,நீர்க்கோவை வீக்கத்திற்கும் மேலும் சொறிசிரங்குக்கும் மாதவிடாய் வராமல் இருப்பதற்கும் மருந்தாக பயன்படுகிறது.ஆயுர்வேத நிபுணரான சரகர் தமது சம்ஹிதையில்இந்த புல் மூக்கிலிருந்து உதிரம் வடிவதைக்குணப்படுத்தவும்,சருமப்பரப்பில் ஏற்படும் கட்டிகளைக் கரைக்கவும் சிறந்த நிவாரணிஎன்று எழுதுகிறார்.
ஹோமியோபதியில் பலமுனை நிவாரணியாக
மேஜர் தி.சா.இராஜூ சைனடோனை இந்திய பல்சடில்லா என அழைக்கிறார்.மேலும் அவர் கூறுகையில்அருகம்புல்லின் மருத்துவக்குணங்களும்,பல்சடில்லாவின் இயல்பும் பல வகைகளில் ஒத்துள்ளன.மேலும் தீவிரமான மருத்துவ ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கு மாற்று மருந்தாக பல்சடில்லா போலவே பயன்படுகிறது”. இதை முதன்முதலில் நிரூபணம் செய்தவர் ஜூகல் கிஷோர் [Proved by Jugal Kishore on 3 persons [2 men, 1 woman] in 1969] ஆவார்.


பொதுவான குறிகள்
கைகளில் அதிகப்படியான சோர்வு எழுதவே சிரமம்;களைப்பு,சோம்பல்,வேலை செய்ய பிடிக்காது,சிறு வேலை செய்தாலும் உடம்பு முழுவதும் வலியை ஏற்படுத்தும்,முன்பக்க தலைவலி மூளை உழைப்பால் வரும்.இம்மருந்து ஜீரண மண்டலத்திலும்,சிறுநீரக மண்டலத்திலும் வேலை செய்கிறது.நீர்க்கோர்வையில்(dropsy) சிறுநீர்பெருக்கியாக (diuretic) செயல்படுகிறது.எந்த வகையான இரத்தக்கசிவுக்கும்(epistaxis,menorrhea,bleeding wounds,piles) சைனடோன் முக்கியமான மருந்து.இரத்தத்தில் நச்சுத்தன்மை(blood-poisoning).அலோபதி மருந்துகளினால் ஏற்படும் பின்விளைவுகள்.புற்றுநோயில் இரத்தக்கசிவு.
நோய் கூடுதல்
மாலை மற்றும் மதியம்;மூளை, உடல் உழைப்பு; நாளின் இறுதியில் மற்றும் மாலையில்;வலதுபுறம்.
 நோய் குறைதல்
 சூட்டால்,சாப்பிடுவதால்.
மனம்
காரணமில்லாமல்கோபம்;மனக்குழப்பமும்,மந்தமும் திறந்தவெளிக்காற்றில்>; சப்தம் கேட்டா பிடிக்காது, அந்த சமயத்தில் பேசவும் பிடிக்காது;ஆனால் கூட்டத்தில் ஜாலியாக இருக்க விரும்புவார்.
தலை
கோபப்பட்டதிற்கு பிறகு, மூளை உழைப்பிற்கு பிறகு தலைவலி; நெற்றி சூடாகவும் பாரமாகவும் இருக்கும்; .தலைவலி பெரும்பாலும் வலதுபுறம் வரும், கூடவே உடம்பின் வலதுபுற உறுப்புகளிலும் வலி இருக்கும்.இரத்தப்போக்கினால் கிறுகிறுப்பும் அதைத்தொடர்ந்து சோர்வும்; தலை தள்ளாடும்;
கண்
இமையிணைப் படலத்தின் அழற்சி [Conjunctivitis]; கண்ணழற்சி [ophthalmia];
இமைகள் ஒட்டிக்கொள்ளும் காலையில்;இமையிணைப்படலம்   தொட்டாலே வலிக்கும்;வலது மேலிமை வீங்கி இருக்கும்;காலை<;கண்களில் வலி காலையில்,குளித்தவுடன் அல்லது முகம் கழுவியதும்.
மூக்கு
சில்லிமூக்கு [ EPISTAXIS]உடைந்தால் இரத்தம் எளிதில் நிற்காது;மூக்கில் இரத்தம் நல்ல சிவந்த நிறமாகவும் இருமலுடனும் வரும்.வெய்யில் சூட்டால் சில்லிமூக்கு உடையும்;குளிர்ச்சியால்>.துயரருக்கு சில்லிமூக்கு திரும்ப திரும்ப உடைந்த வரலாறு இருக்கும் [history of recurrent epistaxis].
சளி தண்ணீராக தும்மலுடன் இருக்கும்..மூக்கில் சதைவளர்ச்சி.
வாய்
எச்சில் அதிகமாக சுரக்கும்;சுவையுணர்வே இருக்காது.மேலண்ணம் வறண்டிருக்கும்;சிவந்த புள்ளிகள் இருக்கும்; புளிப்பு,காரம் சாப்பிடமுடியாது.குளிர்ச்சியால்>.தொண்டையிலிருந்து மோசமான வாடை வருவது போல உணர்வு இருக்கும்.
வயிறு
பசியின்மை சாப்பிட்டவுடன் திரும்ப வந்துடும். சாப்பிட்டபிறகு வயிறு பாரமான உணர்வு இருக்கும்.பித்தம் கலந்த வாந்தி;வயிற்றுப்பொருமலுடன் அடிவயிறு பெரிதாகவுமிருக்கும்,பிடிப்புடன் மாலை4மணிக்குபின்.சாப்பிட்டபின் தூக்கக்கலக்கமாக இருக்கும் தொப்புளைச்சுற்றி கனமாக இருக்கும்,தொப்புளுக்கு  கீழேயும்,சுற்றியும் ஒரு பந்து இருப்பது போல உணர்வு இருக்கும். அடிவயிற்றில் பிடிப்புவலி இருக்கும்.வலது அடிவயிற்றின் மேல்பகுதியில் வலி இருக்கும்,ஓய்வெடுத்தால் மறைந்துவிடும்.நாட்பட்ட வயிற்றுப்போக்கு,சீதபேதி. மலம் எரிச்சலேற்படுத்துவதாகவும்,மிருதுவாகவும் மஞ்சளாகவும் இருக்கும். காலையில் மலம் கழிக்க அவசரமாகவும் கடும் வயிற்றுவலி இருக்கின்ற உணர்வும் இருக்கும்.  காரத்தன்மையான மலம் நாற்றத்துடனும்,சத்தமாகவும் வெளிப்படும். நாள்பூராவும் மலம் கழிக்கவேண்டும் என்ற அவா தொடர்ந்துகொண்டே இருக்கும் மலத்துடன் நிறைய காற்று பிரியும்.மூலம் வலியுடனோ,வலியில்லாமலோ
இரத்தப்போக்கு
எல்லாவகையான இரத்தப்போக்கிற்கும்;சில்லிமூக்கு,புண்ணில் இரத்தம் வடிதல்,குடல்களில் இரத்தக்கசிவு,இரத்தக்கசிவுள்ள மூலம் இவற்றிற்கு சைனடோன் சிறப்பானது
சிறுநீரகமண்டலம்
சிறுநீர் கழித்தவுடன் சிறுநீர்த்தாரையில் வலி இருக்கும். சிறுநீர்த்தேக்கம் அல்லது சிறுநீர் அடக்கப்படுதல்;சிறுநீர்ப்பையில்[vesical calculus] கல்;இரண்டாம்நிலை ஸிபிலிஸ்.சிறுநீரில் இரத்தம்,எரிச்சலான வலியுடன்; சிறுநீரில் இரத்தம் குறிப்பாக ஆணின் பிறப்புறுப்பில் அல்லது சிறுநீர்ப்பையில் அடிபட்டதால்[blumia odo]; வலியுள்ள நீர்க்கடுப்பு.தும்மும்போது சிறுநீர் பிரியும்.



பெண்
மாதவிடாய்ப்போக்கு நல்ல சிவந்த நிறமாகவும் அதைத்தொடர்ந்து  சோர்வும்;படுக்கையை விட்டு எழுந்திரிக்கமுடியாது;அதிகப்படியான இரத்தப்போக்கு அடிபட்டதால் அல்லது கால் வழுக்கியதால்;இரத்தநாளங்களில் வலியுள்ள வீக்கம்;மாதவிலக்கின்போது மட்டுமீறிய இரத்தப்போக்கு(Ficus Rel., Menis Pur, Blumia Odo).
 சுவாச மண்டலம்
இரத்தத்துடன் இருமல் குறிப்பாக காச நோயாளிகளுக்கு[இபிகாக்,அகாலிபா இண்டிகா]இதயத்தில் வலியுடன்;கடுமையான துடிப்பு;
கைகால்கள்
கைகளில் சோர்வு டைப் அடிப்பவர்களுக்கு<;கால்களில் வலியும் அமைதியின்மையும் இரவில் படுத்தால்<;எழுந்தால்,இறுக்க கட்டினாலோ (tight bandaging) >. சூடு கால்பெருவிரலின் நுனி மற்றும்   உள்ளங்கால்களில் பரவும் அதனால் போர்வைக்கு வெளியில் பாதத்தை நீட்டிக்கொள்வார்.
தூக்கம்
காலில் உள்ள வலியால் தூக்கம் தடைபடும்.
தோல்
புண்களில் இருந்து எளிதாக இரத்தம் வரும்,சொறிசிரங்கில் வெளி உபயோகமாக பயன்படுகிறது.நச்சுச்சீழ்க்கட்டு(carbuncle),அக்கி(erysipelas)
Clinical
காலரா,கோடையில் வயிற்றுப்போக்கு,சீதபேதி,குடல் அழற்சி.
Dd
 Aloe, Kali-s, Med, Nat-s, Podo, Puls, Sulph.
Source
Jugal  Kishore

banarjee material medica

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக