திங்கள், 10 ஏப்ரல், 2023

உலக ஓமியோபதி நாள் 10-04-2023 மருத்துவர் ப.பாலசுப்ரமணியன்

 

உலக ஓமியோபதி நாள் 

உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் கோளாறு உண்டாக்கி நோயை தோற்றுவிப்பவை எவை என்பதையும் அவற்றை துயரரிடம்  இருந்து எவ்வாறு அகற்றுவது என்பதையும் அறிந்தவரே  உண்மையில் மருத்துவர் ஆவார். --- மணிமொழி 4 ஆர்கனான்

மருத்துவமாமேதை சாமுவேல் ஆனிமானின் 269ஆம் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம்

 

ஓமியோபதி மருத்துவத்தினை பற்றிய விழிப்புணர்வு வகுப்புக்கான தேவை என்ன?

இன்று உலகளவில் மருத்துவம் மிகப்பெரிய பணம் கொழிக்கும் தொழில்,உலக முதல் வரிசை பணக்காரர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு வகையில்  மருந்துத் தொழிலில் உள்ளவர்கள் தான்.

இதற்கு அடிப்படைக் காரணம் இங்கே நாம் எல்லோரும் நோயாளிகள் தான்.

மக்களில் 100க்கு 10 பேருக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு இருக்கிறது.

100க்கு 10 பேருக்கு நீரிழிவு நோய் என்னும் சர்க்கரை நோய் இருக்கு.

30% இரத்த அழுத்தம்

60% கொழுப்பு சார்ந்தது மற்றும் இதய நோய் வாய்ப்பு

25% குழந்தையின்மை பிரச்சனை இருக்கு

இது இல்லாமல் சிக்குங்குனியா, டெங்கு, கொரனா மற்றும் இது போன்ற இன்னும் பெயரிடப்படாத பெருங்கொள்ளை நோய்கள், இந்த நோய்கள் வரமால் தடுக்கிறோம் என்ற பேரில் என்கிற பேரில் தடுப்பூசி போட்டு புதிய புதிய நோய்களை உருவாக்குவதும் நடக்கிறது.  ஒட்டுமொத்தத்தில் நோய்கள் மனித குலத்தையே புரட்டிப்போட்டுவிடுகிறது.

 

  நோய் நம்மீது ஒரு போரையே தொடுத்திருக்கிறதா அல்லது மருத்துவக்கொள்ளை நிறுவனங்கள் நம்மீது வலிந்து நோயை திணிக்கிறதா என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் நாம் மாட்டிக்கொண்டிருக்கின்றோம்.

கொரானா என்ற பெருந்தொற்று காலத்தில் நவீன மருத்துவம் சரியான தீர்வை தரவில்லை

மாஸ்க்க போடு, மணிய அடி, கைய கழுவு,  கூட்டம் போடாத, தடுப்பூசி போடு, பூஸ்டர் போடு எனும் அவர்கள் திரும்ப திரும்ப கூவியதை இப்போது அவர்களே இதனால் எல்லாம் கொரானாவை விரட்ட இயலவில்லை என ஒப்புக்கொள்கிறார்கள்.

தடுப்பூசி போடாமல் இருந்தவர்களை கடுமையாக குற்றம் சாட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ தடுப்பூசி கடுமையான பின்விளைவுகளை தரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களே சொல்கிறார்கள்.

இப்போது புரோட்டா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக்

சவர்மா சாப்பிட்ட ஹார்ட் அட்டாக்

கபடி விளையாண்டா ஹார்ட் அட்டாக்

பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு கூட ஹார்ட் அட்டாக்

என கொரனாவுக்கு பிறகு புதுசு புதுசா நோய்கள்  வலம்  வருகின்றன.

குழந்தையின்மை ..ஊருக்கு 4,5 செயற்கை கருத்தரிப்பு மையங்கள்

இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவெனில்

நமக்கு நலம் நோய் இதற்கான பொருளே தெரியவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்   மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம் தேவை.

விலங்குகள் கூட தனக்கு எதாவது நோய் வந்தால் தனது மரபில் இருக்கும் மருத்துவ அறிவை பயன்படுத்தி தம்மை தாமே நலப்படுத்திக்கொள்கின்றன.

காட்டில் திரிந்த மனிதன் பண்பட்டு நாகரீகமடைந்து வேளாண்மை செய்யத்தொடங்கிய காலத்தில் எல்லாம் மருத்துவ அறிவை மேம்படுத்தி இருந்தான். அதை தன் தலைமுறைக்கும் கடத்தியே வந்திருக்கின்றான்.

ஆனால் நவீனம்  வந்தவுடன் எல்லாம் மாறத்தொடங்கி விட்டது.

பசுமைப்புரட்சி என்ற பெயரில் வேளாண்மை செத்துவிட்டது.

வெண்மைப்புரட்சி என்ற பெயரில் கோழிகளும்  கால்நடைகளும் அழிக்கப்பட்டன.

புரட்சி என்ற பெயரிலும் அறிவியல் என்ற பெயரிலும் நம்முடைய மரபு சார்ந்த அறிவை கொன்று அவற்றை எல்லாம் மூட நம்பிக்கை என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

இனி இழந்து விட்ட நமது  மரபு அறிவை மீட்க வேண்டியே நாம் மருத்துவம் சார்ந்த  விழிப்புணர்வு வகுப்புகளை நாம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

மருத்துவத்தில் நாம் விழிப்புணர்வு பெற்றுவிட்டாலே நாம் தன்னிறைவு அடைந்துவிடுவோம்.

நம்முடைய வருமானத்தில் சரிபாதி மருத்துவத்திற்கும் மீதிபாதி கல்விக்கும் தான் செலவாகிறது.

சரி அதற்கு எதற்காக ஓமியோபதி பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்? சித்தம், ஆயுள்வேதம், யுனானி, அக்குபஞ்சர் என இவை எல்லாம் இருக்க ஓமியோபதி ஏன்?

 

ஏனெனில் உண்மையிலே எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய  மரபு அறிவை எளிமையாக்கி குறைந்த செலவில் அனைவரும் பயன்படும் வகையில்

தரக்கூடிய மருத்துவம் ஓமியோபதி மட்டுமே!

ஓமியோபதி ஓர் புரட்சிகர மருத்துவம்

மற்ற மருத்துவங்களும் அதற்கென தத்துவங்களை கொண்டிருந்தாலும், பயன்பாட்டில் எளிமையாக, விரைந்து நலமாக்கவல்ல, குறைந்த செலவு ஆகக்கூடிய மருத்துவம் ஓமியோபதி மட்டுமே.

இப்படிப்பட்ட ஓமியோபதி மருத்துவமுறையை பற்றிய புரிதல் சாதாரண பாமர மக்களுக்கு மட்டுமின்றி படித்தவர்களுக்கு கூட இல்லை. ஏனோ அரசாங்கமும் ஓமியோபதியின் மேல் பாராமுகமாக இருக்கின்றது.

ஓமியோபதியை நாட்டு மருந்து என்ற அளவில் தான் மெத்தப்படித்த மேதாவிகளே கருதுகிறார்கள்.

இது நாட்டு மருந்தோ, சித்த மருத்துவமோ,அல்லது ஆயுர்வேதமோ கிடையாது. இது முற்றிலும் வேறுபட்டது.

இது தோன்றிய இடம் செர்மனி. கி.பி 1755இல் பிறந்த மருத்துவமாமேதை சாமுவேல் ஆனிமான் அவர்களால் இயற்கைக்குள் புதைந்திருந்த புதையலை மீட்டுருவாக்கம் செய்து கி.பி 1796இல் ஓமியோபதி மருத்துவமாக்கி தந்தார்.

----

சிறந்த மருத்துவம் எப்படி இருக்கவேண்டும்?

 நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என திருவள்ளுவரும்

திருமூலர் திருமந்திரம் :

மறுப்ப துடல்நோய் மருந்தென லாகும்

மறுப்ப துளநோய் மருந்தெனச் சாலும்

மறுப்ப தினிநோய் வாரா திருக்க

மறுப்பது சாவை மருந்தென லாமே.

ஆனிமான் சொல்கிறார்

ஏற்கெனவே நலமாக இருந்து தற்போது தற்காலிகமாக இழந்துவிட்ட ஆரோக்கியத்தை மீட்டுத்தருவதே மருத்துவம்

இங்கே மருத்துவமோ மருத்துவரோ எமதூதராக இருக்கிறார்

மரணபயத்தை காட்டிவிட்டாயே பரமா!! என்பது தான் இன்றைய மருத்துவ நிலை

 

தற்போதைய மருத்துவம் நோயறிதலுக்கே மருத்துவப்பரிசோதனைக்கே நிறைய பணம் செலவிட வைக்கிறது.

இரத்தப் பரிசோதனை, சிறுநீர், மலம் பரிசோதனை. சி.டி எம்.ஆர்.ஐ. ஸ்கேன். ஈ.சி. ஆஞ்சியோ, பயாப்சி

 

நோயறிந்த பிறகு குறிப்பிட்ட உறுப்பில் தான் நோய் இருக்கிறது.. அதனால் அந்த உறுப்பை நலமாக்கவேண்டும். அல்லது அந்த உறுப்பை மாற்றவேண்டும், அதுவும் முடியாதபட்சத்தில் அந்த உறுப்பை நீக்கவேண்டும். என ஒவ்வொரு செயல்முறையும் செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.

நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை நீக்க தற்போதைய மருத்துவம் முயலவில்லை

அதற்கு மாறாக உறுப்பை வெட்டிவீசுவது எளிதாக இருக்கிறது.

சரி மருத்துவமுறை இப்படி இருக்கே இதற்கு அடிப்படையான காரணம் தான் என்ன?

நமது அறியாமை தான்

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உயிர்பிழைச்சா போதும். என மருத்துவரிடம் நமது பொறுப்பை ஒப்படைப்பது தான்.

ஆரோக்கியத்தை பேணுவதில் நமது பொறுப்பும் கடமையும் என்னவாயிற்று?

மருத்துவம் பற்றி நமக்கு எதுவும் தெரியத் தேவையில்லையா?

அவசியம் தெரிந்திருக்கனும்.. நம் முன்னோர்களுக்கு மருத்துவ அறிவு இருந்ததுக்கான சான்றே பாட்டி வைத்தியம்

இந்த மூடத்தனத்தை முதலில் மாற்றனும்

அதற்காக தான் இந்த விழிப்புணர்வு கல்வி

உடலும் மனமும் உயிரும் உள்ள இந்த அற்புதப்பிறப்பை நமது அறியாமையால் நோய்க்கு உள்ளாக்குகிறோம்.

பிறப்பிலே நமது மரபணுவில் மருத்துவ அறிவு இருந்திருக்கிறது. அதை மீட்டெடுத்து பட்டை தீட்டி அடுத்த தலைமுறைக்கும் கடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கு.

அதனால் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் இருக்கனும்.

அதற்கு மருத்துவம் என்றால் என்ன?, அதன் தத்துவம், நோய் என்றால் என்ன?, நலம் என்றால் என்ன?, மருந்து என்றால் என்ன? எதெல்லாம் மருந்து? என்பது பற்றியெல்லாம் நாம் ஒவ்வொருத்தரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும்.

அதற்காக தான் இந்த விழிப்புணர்வுக்கல்வி

அனைத்து மக்களுக்கும் மருத்துவ அறிவு வளர்ந்தால் தான் நோய் பற்றிய பயம் நீங்கும்.

இன்னொரு முக்கியமான செய்தி என்னவெனில்

உலகம் தற்சார்பு வாழ்க்கைக்கு இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது.

தற்சார்பு வாழ்க்கைக்கு அவசிய தேவை மருத்துவம் கல்வி இவை இரண்டும்  குறைந்த செலவில் கிடைத்தாலே நாம் தற்சார்பு வாழ்க்கையை நிறைவாக மகிழ்ச்சியாக வாழ முடியும்.

நம்முடைய உழைப்பின் பெரும்பகுதி மருத்துவத்துக்கும் கல்விக்குமே செலவாகும் இந்த சூழலில் நாம் எப்படி தற்சார்பான இயற்கையோடியைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

சரி அதற்கு ஓமியோபதி எவ்வாறு உதவும்?

ஓமியோபதி எளிமையான மருத்துவம். மற்ற மருத்துவமுறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் செலவு குறைந்த மருத்துவம்.

பக்கவிளைவுகள் இல்லாதது, மனிதனை முழுதுமாக நலப்படுத்துகிறது, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தத்துவத்தின் அடிப்படையில் நலமாக்கலானது இருக்கிறது.

நோயாளியின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது,

நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கொத்த மருந்தை தந்து நோயை நலமாக்குகிறது.

அது என்ன காரணமாக இருந்தாலும். உடல்ரீதியான, மனரீதியான காரணங்கள் எதுவாகினும்

மேலும் மனிதனை சாதாரண நிலையில் இருந்து உன்னத நிலைக்கு மாற்றக்கூடியது.

மருந்து கொடுத்து குணப்படுத்தும் மருத்துவமுறைகளிலே மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவம் ஓமியோபதி

ஆனிமான் சொல்வது போல இரு புள்ளிகளை எப்படி ஒரே நேர்கோடு இணைக்குமோ அதுபோல ஓமியோபதி மட்டுமே தத்துவார்த்தரீதியில் மிகச்சிறந்த மருத்துவம்.

ஓமியோபதி மண்ணுக்கும் செடி,கொடிகளுக்கும், ஆடு,மாடுகளுக்கும், மனிதனுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து சீவராசிகளுக்குமான மருத்துவம்

மண்ணுக்கும் மருந்தானது ஓமியோபதி

உதாரணத்துக்கு

மனிதர்களுக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் சாதாரண சளி காய்ச்சல் முதற்கொண்டு சர்க்கரை, பிரசர், கொலஸ்ட்ரால்,கிட்னி பெயிலியர்  மற்றும் கொரானா போன்ற பெருந்தொற்று நோய்கள் மற்றும்  மருந்தே இல்லை என சொல்லப்படக்கூடிய எயிட்ஸ், புற்றுநோய், ஆட்டிசம், மஸ்குலர் டிஸ்ரோபி ஏன் இன்னும் புதிதாக வரக்கூடிய பெயர் வைக்கப்படாத நோய்களுக்கு கூட ஓமியோபதியில் மருந்துண்டு.

திக்குவாய் துயரர் ஒன்று

துயரர் பள்ளி மாணவர் அவருக்கு சின்ன வயசுல இருந்து திக்குவாய், திக்கி திக்கிதான் பேசுவார், யாராச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது,பயங்கரமா திக்கும்,புது ஆட்களை கண்டாலே பயப்படுவார் 

ஆனால்  பேச ஆரம்பிக்கும்போது தான்  திக்கும், நாலு வார்த்தை பேசிட்டான்னா அப்புறம் திக்காது.

 திக்குவாயால் என்ன என்ன பாதிப்பு என விசாரித்ததில்

சார்! நான் +2 படிக்கிறேன், ஃப்ரெண்ட்ஸ்லாம் படிக்கறப்ப நான்  சத்தமா திக்கி திக்கி படிக்கறது டிஸ்டர்பா இருக்கு  தூரமாப்போய் படிடா  அப்படின்னு சொல்றப்ப மனசு ரொம்ப கஷ்டமாயிடுது, இதுக்காகவே நான் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே தனியா படிப்பேன்.

பேசும்போது திக்குவதாலயே யாரிடமும் பேசவே நான் விரும்புவதில்லை,அப்படி பேசும்போது அவர்கள்  ஏதும் சொல்லிட்டா மனசு  தாங்காது.

எப்ப எப்ப திக்குது?

புதிய நபர்களிடம் பேசும் போது,அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது,

ஆசிரியர்களிடம் பதில் சொல்லும்போது,

பரீட்சைக்கு சத்தம் போட்டு படிக்கும்போது

 பாட்டு பாடறப்ப திக்கறது இருக்காது.

(பாட்டு    பாடும்போது  துயரர்கள் பெரும்பாலானோரிடம்  திக்குவது இருக்காது,காரணம் அது ஞாபகத்தில் இருந்து வருவது,பேசுவது உடனடியாக சிந்தித்து பேசுவதால், தவறாக பேசிவிடுவோம் என்ற பயம்,பதட்டத்தால் திக்குகிறது).

Observation

பேசும்போது ஒவ்வொரு முறையும் வாக்கியத்தை முடிக்கும் முன்னே வார்த்தைகளை முழுங்கிவிடுகிறார்.

Rx

Similimum homeo medicine prescribed

Follow up

6 மாதங்களில் 50% better

2 வருடங்களுக்கு பிறகு

  80%  better  மீண்டும்  மருந்து கொடுக்கப்பட்டது.   தொடர்ச்சியாக ஒரு வருடம்  சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வருட சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறிவிட்டார். ஆனாலும் எப்போதாவது திக்குகிறது.அதுவும் முறையான மூச்சுப்பயிற்சியும் பேச்சுப்பயிற்சியும் செய்தால் அதுவும் இருக்காது. தற்போது  +2 வில்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று  B.E. படித்துக்கொண்டுள்ளார்.

துயரர் சரிதை 2

மூக்கில் சதை வளர்ந்த துயரருக்கு குறிகளுக்கு ஏற்ப ஓமியோபதி மருந்து கொடுக்கப்பட்டது ஒரு மாதத்தில் சதை குறைந்து படிப்படியாக நலமானார், அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது ஓமியோபதியின் மூலம் 

கால்நடைகளுக்கும்  ஓமியோபதி

மாட்டுக்கு கர்ப்பப்பை வெளித்தள்ளுதல்

மாடு கர்ப்பப்பை வெளித்தள்ளியிருந்தது கர்ப்பகாலத்தில் அதற்கு போடாபைலம் கொடுக்கப்பட்டது.

 கோமாரிக்கு ஓமியோபதி 

மாடுகளுக்கு வந்த கோமாரி நோய்க்கு இரஸ்டாக்ஸ் மற்றும் பாதரசம் குறிகளை அனுசரித்து நிறைய மாடுகளை இறப்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது ஓமியோபதி………

அக்ரோ ஓமியோபதி

 

தக்காளி-துளசி 

தக்காளிக்கு என்ன நோய் வந்தாலும் பூச்சி, சத்து குறைபாடு என எது வந்தாலும் துளசி ( ஓசிமம் கானம்) தான் மருந்து

பிடுங்கி நடும் பயிர்கள் குறிப்பாக நெல்நாற்றுக்கு

விதை நேர்த்திக்கு சிலிக்கா

நாற்று பிடுங்கி நடும்போது ஆர்னிகா பலன் தரவில்லை எனில் காலண்டுலா

அப்போதும் பலன் இல்லை எனில் கார்போ வெஜ்

இது நாலும் போதும் நெற்பயிர் பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் ரெஸ்குயூ ரெமெடி

எறும்புத்தொல்லை இருந்தால்

கற்பூரம் camphora , காலண்டுலா (சாமந்திப்பூ- calendula), புதினா 

அசுவினிப்பூச்சி

புதினா,துளசி, வெங்காயம், அசுவினியை உண்ணும் பூச்சி கோக்கினெல்லா

வண்டு

துளசி, அரேனியா(சிலந்தி), காலண்டுலா(சாமந்திப்பூ), புதினா,தூஜா,சிலிகா,

தென்னைமரவண்டு

டனாசெட்டம், காலி பைக்

கம்பளிப்பூச்சி

விளக்கெண்ணைய், ஆமணக்கு

கரப்பாண் பூச்சி

வெங்காயம் கற்பூரம் அரேனியா

கொசுவிரட்டி

தும்பை, துளசி, கோக்கினெல்லா

நத்தை

ஹெலிக்ஸ், பொட்டாசியம் பெர்மாங்கனேட்

 

சத்து பற்றாக்குறை

போரான் : போராக்ஸ்

சுண்ணாம்பு சத்து_ சிலிகா

நைட்ரஜன் சத்து மாலிப்டினம்

பாஸ்பரஸ்- அலுமினா, கல்கேரியா கார்ப், இரும்பு, உப்பு.

பொட்டாசியம்- இரும்பு உப்பு கந்தகம்

சிலிகா – கார்போ வெஜ்

சத்தே இல்லைனா

வெங்காயம்

துணைப்பயிர்/ நிரந்த வேளாண்மை

சோளம்,பாசிப்பயிறு, பூசணி

வாழை வட்டம்

மஞ்சள் பூச்செடிகள்

நன்மை செய்யும் பூச்சிகளை வரவைத்தல்.

உயிர்ம சமநிலை பேணுதல். பயிர் சுழற்சி

ஓமியோபதி அறிந்திருந்தால் மட்டுமே இயற்கை விவசாயத்தை செவ்வனே செய்யமுடியும்.

மண்ணுக்கு கொடுத்தது

சிலிகாவை கொடுத்து பொட்டலாக கிடந்த மண்ணை விளைச்சல் நிலமாக மாற்றினார் அக்ரோ ஓமியோபதியின் தந்தை  வைகுந்தநாத் கவிராஜ்.

இறுதியாக

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மருத்துவ விழிப்புணர்வு அடைந்திருப்பது என்பது அத்தியாவசியமானது. அதற்காக தான் மருத்துவமாமேதை சாமுவேல் ஆனிமான் இந்த அற்புத மருத்துவத்தை சாமான்ய மக்களுக்காக சாமான்ய மக்களின் மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் படைத்தார்.

வாழ்க மருத்துவ மாமேதை ஆனிமான் புகழ்!

வாழ்க விழிப்புணர்வுடன்!!


குறிப்புக்கு பயன்பட்ட நூல்

ஓமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம் 

ஆசிரியர் பழ.வெள்ளைசாமி