*உரமா? நஞ்சா??*
bala@agrohomoeopathy
NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல அது பயிருக்கான நஞ்சு
"விளைச்சல் குறைவாக இருந்தால் காம்ப்ளக்ஸ் அடிக்கணும்"
என விவசாயிகள் அடிக்கடி கூறுவதுண்டு. காம்ப்ளக்ஸ் உரம் விளைச்சலை கூட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அதுவே அவர்களின் விளைச்சலுக்கு எமனாகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.
மண் பலவகையான குணங்களை உடைய சத்துக்களையும் உள்ளடக்கியது(நைட்ரஜன்,பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சிலிக்கா, கந்தகம், மாங்கனீசு,மெக்னீசியம்,இரும்பு,மாலிப்டினம்,சோடியம் உப்பு,போரான் மற்றும் கார்பன் போன்ற எண்ணற்றவை). இந்த ஒவ்வொரு சத்துக்களுக்கும் ஒவ்வொரு குணமுண்டு, ஒவ்வொன்றின் அளவு கூடுதலும் குறைவும் பயிரை பாதிக்கக்கூடிய காரணியாக இருக்கின்றன.
காம்ப்ளக்ஸ் NPK என்பது நைட்ரஜன்+பாஸ்பரஸ்+பொட்டாஷ் இவற்றின் சரிவிகித கலவையாகும் 17-17-17. இந்த மூன்றும் பயிரின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகித்தாலும்
இவற்றை அதிகப்படியான அளவில் பயிருக்கு தெளிப்பது அதிக ஊட்டத்தை கொடுக்கும்,அதிக ஊட்டம் நோய் ஏற்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான தேவைக்கதிகமான நைட்ரஜன் அல்லது நைட்ரேட் அபரிமிதமாக தாவரங்களுக்கு தருவது பல தொல்லைகள் உருவாக காரணமாகிறது. இரசாயன உரங்களின் மூலம் தேவைக்கதிகமாக தெளிக்கப்படும் நைட்ரஜன் தாவரங்களை கொழுக்க வைத்து ஊதி நீரேறி பெருக்க வைக்கிறது. இந்த நிலையில் உள்ள தாவரமே, தன்னுடைய சரிசம நிலையை தக்க வைத்துக்கொள்ள அனைத்து வித பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.உளுத்தல் மற்றும் அழுகுதல்,அதுவும் ஈரக்கசிவு அழுகுதல் இவையே அதன் விளைவுகள்.
மனிதன் நொறுக்குத்தீனி (junk food) என்ற குப்பை உணவுகளை தின்பதன் விளைவே பலவிதமான நோய்களுக்கும் காரணமாகிறது(எ.கா: உடல் பருமன்,நீரிழிவு,இரத்த அழுத்தம்,இதய நோய்கள்).
அதே போல NPK எனப்படும் காம்ப்ளக்ஸ் உரமல்ல, தாவரங்களுக்கான நஞ்சு. பலவகையான பூச்சிகளும் நோய்களும் இதற்கு பிறகே பயிரைத் தாக்குகின்றன ஏனெனில் பயிர்கள் பூச்சிகள் தாக்குவதற்கு ஏதுவாக இருக்கின்றன.
தாவரங்கள் கொண்டுள்ள அதிகப்படியான நைட்ரஜன் சத்தே அசுவினிப் பூச்சிகளை ஈர்க்க காரணமென University of Kentucky செய்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வருகிறது.
சிலந்திப்பூச்சிகள் ஒரு நாளைக்கு 5லிருந்து 6 முட்டைகள் வரை இடும் என USDA ஆய்வுகள் சொல்கின்றன. அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவானது சிலந்திப்பூச்சிகளின் முட்டையிடும் அளவை ஒரு நாளைக்கு 10 ஆக அதிகரிக்கிறது என்று உறுதிப்படுத்துகின்றன.(Hylton, 1974.)
அதிகப்படியான நைட்ரஜன் சத்தின் அளவே பழங்கள் பிஞ்சிலே உதிர்வதற்கும் காரணமாகிறது. பயிர்களின் அமினோ அமிலங்களின் அளவை நைட்ரஜன் அதிகரிக்கிறது, அதிக அளவிலான அமினோ அமிலங்களே பூச்சிகளை ஈர்க்கின்றன.
அசுவினிப்பூச்சிகள் அதிக அமினோ அமிலம் கொண்டுள்ள தாவரத்தையே தேர்ந்தெடுக்கின்றன என A Temple University ஆய்வு சொல்கிறது.
நைட்ரஜன் பொட்டாசியத்துடன் இணைந்து போரானுக்கு எதிரியாக மாறுகிறது, அது போரான் பற்றாக்குறைக்கு வித்திடுகிறது. போரான் பற்றாக்குறையின் விளைவாக பயிர்களில் வேரும் தண்டும் இணையும் பகுதி அழுகுகிறது, இலைகள் நலிவடைகின்றன, தண்டுகள் நடுவில் ஓட்டையாகின்றன.
அதிகப்படியான சுண்ணாம்புச்சத்தும் பாஸ்பரஸ் சத்தும் போரான் ஊட்டத்தை தடுத்து நிறுத்துகிறது.
இந்த மூன்று (NPK) சத்துக்களின் தேவைக்கதிக ஊட்டமானது பயிர்களின் தண்டு உடைதலுக்கும், பூ உதிர்தலுக்கும், வேர் அழுகலுக்கும், இலை பழுத்து உதிரவும் மற்றும் பயிர்கள் திடீரென காய்ந்து போகவும் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கும் காரணமாகின்றன.
இவை எல்லாம் எப்போது நடக்கும் என்றால் போரானின் அளவு மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும்போதுதான் நடக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஆக மண்ணில் 10இலட்சத்தில் ஒரு பங்காக குறைந்திருக்கும் சத்தை ஈடுகட்ட அதற்கு ஒத்த மிக நுண்ணிய அளவிலான மருந்தே தேவை,
அதை விடுத்து அதிகப்படியான அளவில் உரத்தை மண்ணிற்கு தருவதானது அதற்கே நஞ்சாகிறது.
இதனால் தான் வீரியப்படுத்தல் எவ்வளவு முக்கியம் என்று ஹானிமன் வலியுறுத்துவதை நாம் உணரலாம். உயிர் ஆற்றலே இயங்கும் பண்பு என ஹானிமன் கூறுகிறார்.
கடைதல் மற்றும் குலுக்கி வீரியப்படுத்திய 6x வீரியமானது 10 இலட்சத்தில் ஒரு பங்கு அளவாக இருக்கிறது. இதிலிருந்து வெறும் நீர்மத்திற்கும் வீரியப்படுத்திய மருந்திற்கும் உள்ள வேறுபாட்டையும், ஹோமியோபதி மருந்தின் செயல்பாட்டையும் அதன் நுண்ணிய தன்மையையும் அறியலாம்.
*முக்கிய ஹோமியோபதி உரங்கள்*
Alternative for NPK
(N)தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்து குறைபாடு இருக்குமானால்
கல்கேரியா கார்ப் மற்றும் மாலிப்டினம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.
(P)மணிச்சத்து எனப்படும் பாஸ்பேட்(பாஸ்பரஸ்) சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கு ஏற்ற ஹோமியோபதி மருந்துகள்:
அலுமினா, கல்கேரியா கார்ப், ஃபெர்ரம் மெட், மெக்னீசியம், மங்கானம், நேட்ரம்ம்யூர், ஜிங்கம் மெட்.
(K)சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் சத்து குறைபாடு இருக்குமானால் அதற்கேற்ற ஹோமியோபதி மருந்துகள்:
ஃபெர்ரம் மெட், மங்கானம், நேட்ரம் ம்யூர்
ஆக நல்ல விளைச்சலுக்கு இயற்கையுடன் இயைந்த விவசாய செயல்பாடே சரியானது. பின்வருவனவற்றை சரியான விவசாயத்திற்கு உகந்த செயல்பாடுகளாக கொள்ளலாம்.
1.இரசாயன உரங்களை அறவே தவிர்த்தல், பூச்சி மற்றும் களைக்கொல்லிகளை தவிர்த்தல், எந்த ஊட்டத்தையும் தேவைக்கதிகமாக தருவதை தவிர்த்தல்
2. ஒன்றுக்கொன்று துணையான பயிர்களை விவசாயத்தில் பயன்படுத்தல்(எ.கா: தக்காளியுடன் துளசி, கேரட் பயிரிடுதல்.சோளத்துடன் பயறு மற்றும் பூசணி)
3. பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல் (எ.கா: நெல்லை தொடர்ந்து உளுந்து)
4. நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல் காத்தல் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டும் துணைப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடல்
5. சூழல்,வானிலை மற்றும் மண்தன்மை மற்றும் நீர் இருப்பு இவற்றை அறிந்து பயிரிடுதல்
6. நிரந்தர வேளாண்மை.
7. வளர்ப்புப்பிராணிகள் வளர்த்தல் மூலம் மறு சுழற்சி. அவற்றின் சாணம் உரமாகிறது மற்றும் பயிரின் இலைதழைகள் அவற்றுக்கு உணவாகிறது.
8.ஏதேனும் நோய்த் தாக்குதலுக்கும் சத்துப்பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துதல்.
இதன்மூலம் நல்ல விளைச்சலை விவசாயத்தின் மூலம் பெறமுடியும்.
அது
வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப,
ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு
உழுவதை விடவும் இயற்கையான எருவிடுதலை நல்லது என்கிறார். மற்றும் நீர்பாய்ச்சுவதை விட முக்கியம் அதனை காத்து பராமரிப்பது
ஆகவே ஹோமியோபதி என்ற இயற்கைப் பாதுகாவலன் உதவியுடன் பயிரைப் பாதுகாப்போம்.
தொழில்களில் எல்லாம் தலையாய தொழிலான உழவுத்தொழிலை காப்போம்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
reference: vaikundanath kaviraj
father of agro homoeopathy
http://balahomoeopathy.blogspot.com/