வணக்கம் டாக்டர் அங்கிள். என் அறைக்குள் நுழைந்த அந்தக் குழந்தை கூறிற்று.
வணக்கம் தங்கப் பாப்பா, உன் பேர் என்ன?
கிறிஸ்டி.. மம்மி டாடி எல்லோரு பின்னால் வாரங்க குரலில் ஒரு மணியின் இனிய ஒலி இழைத்தது.
எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். அவர்களுடன் மனம் விட்டு உரையாடுவேன். என் நேசத்தை வெளிக்காட்டுவேன்.
அங்கிள், இது லூர்து மேரி படம் தானே? சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தை அந்தப் பிஞ்சு விரல் சுட்டிக் காட்டிற்று.
ஆமாம் கிறிஸ்டி. உனக்கெப்படி தெரியும்?
எங்கள் வீட்டில் இதே மாதிரி ஒரு படம் இருக்கிறது. அதற்குத் தினமும் ஒரு ரோஜாப்பூ வைப்பேன்.
உங்கள் வீட்டில் ரோஜாச் செடி இருக்கிறதா?
ஐய்யய்யோ, அது கொடி, செடி இல்லை. செடி ரோஜாவை விட கொடி ரோஜா நிறையப் பூக்கும்.
இதற்குள் குழந்தையின் பெற்றோர்கள், திரைக்கு வெளியே குரல் கொடுத்தார்கள்.
உள்ளே வரலாமா?
அவர்களை வரவேற்று அமரும்படி வேண்டினேன். அன்பர் தாமஸ் என் நெருங்கிய நண்பர். அவருடைய மனைவி சகாய மாதா என்னிடம் பெருமதிப்பு வைத்திருப்பவர்.
கிறிஸ்டி உங்களைத் துளைத்தெடுத்திருப்பாளே?
அதெல்லாம் ஒன்றுமில்லை. கொடியிலும் ரோஜா பூக்கும் என்ற செய்தியை அவளிடம் தெரிந்து கொண்டேன். அவள் தாவர இயல் பேராசிரியரின் மகள் அல்லவா? வெண்டைக்காய்க்குக் கூட கொடி உண்டு. அது மிதி பாகலைப் போல தரையில் படரும். காய் சிறியது. முள் இராது. ருசி அதிகம்.
உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இந்தப் பெண் சில நாட்களில் படுக்கையை நனைத்து விடுகிறாள்.
அது மட்டுமன்று, நண்பரே, தூக்கத்தில் பல்லைக் கடிக்கிறாள். சதா மூக்கை நோண்டுகிறாள். உயரமான தலையணை வேண்டும். மல்லாந்து படுத்திருக்கும்போது ஒரு காலை மடித்து நிமிர்த்து வைத்திருப்பாள்.
நேரில் கண்டதுபோல் சொல்லுகிறீர்களே.
இன்னும் சொல்லட்டுமா? சமையலில் தாளிதம் செய்யும்போது அந்த இடத்திலிருந்தே ஓடி விடுகிறாள்.
இவை எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
மாமேதை ஹானிமன் நாட்பட்ட நோய்கள் என்றொரு நூல் எழுதியிருக்கிறார். நோயாளியின் உள இயல்பை, செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்த பிறகே பரிசோதனைகளில் வேறுபாடு இருக்குமானால் அதையும் குறிப்பிடத் தவற மாட்டார்.
நீங்கள் பயின்றிருக்கும் சாத்திரம் மிக உயர்ந்தது நண்பர் கூறினார்.
எனக்கு இன்னொரு விவரம் தெரிய வேண்டும். கிறிஸ்டியுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
எனக்கு மூன்றும் பெண் குழந்தைகள். மூத்தவள் ரூபி, அடுத்தது ரம்யா, கிறிஸ்டி இளையவள். சகாயம் கூறினார்.
மூத்த இரண்டும் பெண்ணாய்ப் பிறந்து விட்டதால் கருக்கலைப்பு முயற்சிகள் ஏதாவது நடந்ததா?
இல்லை டாக்டர், நாங்கள் அன்னை தெரசாவைப் பின்பற்றுபவர்கள். தாயார் சிலுவைக் குறி இட்டுக் கொண்டார்.
அவர் மட்டும்தான் கருக்கலைப்பு உயிர்க் கொலை என்று துணிவுடன் கூறினார். ஜெர்மனிய நாட்டில் குழந்தைகளே இல்லையாம். குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ள இந்தியாவுக்கு வருகிறார்கள்.
கிறிஸ்டியின் நாவைப் பரிசோதித்துவிட்டு அவளுடைய முகத்தை உற்று நோக்கினேன். கன்னத்தில் வெண் திட்டுக்கள். காது மூளியாக இருந்தது. என்ன காரணம்? நான் வினவினேன்.
துளை புண்ணாகி விடுகிறது டாக்டர்.
என் கருத்து உறுதியாயிற்று.
கிறிஸ்டிக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. ஒரே இருமல். கோழையைத் துப்புவதில்லை. கேட்டால் இனிக்கிறது எஎனறு சொல்கிறாள்.
குழந்iதையின் நாவில் இரண்டு மருந்துருண்டைகளை இட்டேன். ஸ்டான்னம் ஆறு (வெள்ளீயம்). இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உடல் நிலை பற்றி எனக்குத் தகவல் கொடுங்கள்.
மூன்றாம் நாள் நண்பர் தாமஸ் மட்டும் வந்தார். கிறிஸ்டி அடிக்கடி மலம் கழித்தாள். இருமல் குறைந்துள்ளது. மூக்கில் விரல் வைப்பதில்லை.
வெளிப்பட்ட மலத்தைக் கவனித்தீர்களா?
அது பற்றி சொல்ல மறந்துவிட்டேன் டாக்டர். வெள்ளை நிறத்தில் உருண்டையான வெளிப்பாடு சிறு சிறு பூச்சிகள் பின்னிப் பிணைந்திருந்தன.
மருத்துவர் டி.வி.யின் புத்தகத்தைப் பிரித்து நண்பரிடம் காட்டினேன் (பக்கம் 280) புழுக்களை இந்த மருந்து செயலிழக்கச் செய்து விடும் என்று அவர் எழுதியிருக்கிறார்.
செயலிழந்த புழுக்கள் வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும்.
2.
நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.
என்பதே வள்ளுவர் திருவாக்கு. அவரை மிஞ்சிய மருத்துவர் எவர்?
ஒருவர் நோய்வாய்பபடுவதற்கு அவனுடைய பாரம்பரியம் ஒரு காரணம். அடுத்து சுற்றுச் சூழல். அவன் உண்ணும் உணவும் காரணமாக அமையும். அடுத்து அவன் உண்ணும் மருந்துகளின் பக்க விளைவு.
இயற்கையுடன் பொருந்தி வாழ்பவனுக்கு எந்த மருந்தும் தேவையில்லை. உண்மை. ஆனால் எவ்வளவு மனிதர்களால அந்த வகையில் வாழ முடிகிறது? விளைச்சலைப் பெருக்கவும், அவைகளைப் பாதுகாக்கவும், எத்தனை வேதியியல் பொருள்களைப் பயன்படத்துகிறோம்? மாறுபாடில்லாத உண்டி. இது இன்று எங்கே கிடைக்கிறது? வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை சுற்றுச் சூழலை எந்த அளவுக்கு மாசுபடுத்துகிறது?
மண் பானைகளிலும், கற்சட்டிகளிலும் சமைக்கப்படும் உணவே சிறந்ததாகும். மருந்தைத் தயாரிப்பதற்கும் மண்சட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவ முறைகள் வலியுறுத்துகின்றன. கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை, வடநாட்டில் இரயில் நிலையங்களில் மண் குடுவைகளில் பாலும், தேநீரும் வழங்குவார்கள். இன்று எங்கும் பயன்படுத்தப்படுவது பாலிதீன் குவளைகள். சூடான திரவம் அதில் ஊற்றப்படும்போது அது எத்தனை ரசாயன மாற்றத்தை உண்டாக்குகிறது என்று யாராவது எண்ணிப் பார்த்தார்களா?
ஹோமியோபதி மருந்துகளையும் பாலிதீன் குப்பிகளில் நிரப்பித் தருகிறார்கள். கண்ணாடிப் புட்டிகளில் வைத்திருக்கும் மருந்துகள் பத்தாண்டுகள் ஆனாலும் இயல்பு மாறாமல் இருக்கும். ஆனால் பாலிதீன் புட்டிகளில் நிரப்பப்படும் மருந்துகள் அவ்வளவு காலம் நிலைத்திருக்குமா? கண்ணாடிப் புட்டிகளில் மருந்தை நிரப்பி கார்க் மூடியை இட்டுத் தர வேண்டும் என்றே நான் மருத்துக் கடைக்காரரை வலியுறுத்துவேன்.
பித்தளைப் பாத்திரங்களில் வைக்கப்படும் உப்பு, புளி சேர்ந்த உணவுப் பொருட்கள் கைத்துப் போகும் (புளித்துப் போகும்). அதைத் தவிர்க்க அதில் வெள்ளீயத்தைப் பூசுவார்கள். வெள்ளீயப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுக்குத் தனியான சுவை உண்டு. ஆனால் அவைகளில் சமைக்கப்படும் உணவை உண்டவர்கள் நாளடைவில் நோய்வாய்ப்படுவதைக் கண்டார்கள். இப்போது ஈயப் பாத்திரங்களே அருகி விட்டன.
வீரியப்படுத்தப்பட்ட மருந்தினால் குணமடையக் கூடிய நோயாளி எப்படி இருப்பான்?
பொதுவாக உடல் சூடாக இருகூகும். நோய் கண் குழியிலிந்து துவங்கும். நரம்பு மண்டலத்தின் வழியாக மெல்லப் பரவும். மெதுவாகக் குறையும். சூரியனின் கதிரை அடியொற்றியே செல்லும்.
சதா சளி, தும்மல், இருமல் இது இரவில் அதிகரிக்கும். மூச்சுத் திணறும். எப்போதும் ஒரு சோர்வு. வியர்வை அதிகமாகப் பெருகும். எலுமிச்சை நிறக் கோழை. தீராத நோய்க்கு ஆட்பட்ட துயரமிக்க முகத்தோற்றம். மொத்தத்தில் அவன் ஒரு அழுமூஞ்சி, சிடு மூஞ்சி.
மாதர்களின் சினைப்பை பிதுங்கும். வெள்ளைப்பாடு அதிகமாக இருக்கும். ஒரே அசதி. பேசக்கூட இயலாத நிலை. தொண்டையில் கமறல். உறுத்தல். கூடவே இருமல்.. சில சமயம் அதில் உதிரம் இழை தென்படும்.
வழிவழியாக ஒரு குடும்பத்தில் காச நோய் இருக்குமானால் இடையூடாக இரண்டு மாத்திரை வெள்ளீயம் விரைவில் நிவாரணம் அளிக்கும். குடலில் புழுக்கள் இருக்குமானால் அவை நிரந்தரமாக நீங்கி விடும்.
பிட்யூட்டரி சுரப்பி என்று ஒன்று உள்ளது. நரம்பியல் மண்டலங்களை அது கண்காணித்துச் சீராக்குகிறது. அதன் இயக்கம் தடைப்பட்டாலும் வெள்ளீயம் அதைச் சீராக்கும் என்பது ஓர் உண்மை. இதுவும் மருத்துவர் கெண்டின் முடிவு. மருந்துண்டதனால் கோழை அதிகமாக வெளிப்படும். அத்தகைய வெளிப்பாடு நல்லதே. அதைக் கண்ட வீனாகக் கவலைப்பட வேண்டாம் என்பதே என் கருத்து. எந்த வெளிப்பாடும் அது இயல்பாக அமையுமானால் நன்மையே பயக்கும்.
பித்திஸிஸ் பிட்ரோஸியோ (Pthisis Pitrosia) என்ற புரியாத பெயரைக் கூறி பயமுறுத்துவார்கள். பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டதனால் விளைந்த காச நோய் என்பதே இதன் பொருள். இந்தச் சுரப்பியை வலுப்படுத்துவதற்காக சர்வாங்காசானம் செய்வது ஒரு சிறந்த வழிமுறை. பல சிறுவர்களை இந்த வகையில் சீராக்கிய அனுபவம் எனக்குண்டு. இது இயற்கை மருத்துவம். ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் இதற்காகச் செலவிட்டால் போதுமானது.
வெள்ளீயத்தை உண்டு மெய்ப்பித்தவர் மேதை ஹானிமன் அவருக்கு மருத்துவ உலகமே கடமைப்பட்டிருக்கிறது. வாழ்க அவர் புகழ்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக