வேளாண் ஹோமியோபதி
துணைப்பயிர் வேளாண்மை 2
‘வாழை வட்டம்’
வாழையை பயிரிடுவதில் பழமையான இந்த முறை வட்ட வடிவில் வாழையை பயிரிடுவதாகும். செலவில்லாத நிரந்தர வேளாண் முறையான ‘வாழை வட்டம்’ வீட்டுத்தோட்டங்களுக்கு மிகவும் ஏற்ற முறையாகும். அதிக செலவு பிடிக்காத ஐந்தடுக்கு விவசாய முறையாகும் இது.
பழங்குடி மக்களால் வாழையடி வாழையாக பயிரிடப்படும் ‘வாழை வட்டம்’ ஏன் இன்னும் பெரும்பான்மையான வாழை விவசாயிகளை சென்றடையவில்லை என்பது புதிராக உள்ளது.
பழங்குடி மக்களால் வாழையடி வாழையாக பயிரிடப்படும் ‘வாழை வட்டம்’ ஏன் இன்னும் பெரும்பான்மையான வாழை விவசாயிகளை சென்றடையவில்லை என்பது புதிராக உள்ளது.
வட்ட வடிவ விவசாய முறை வாழைக்கு மட்டுமல்ல தென்னை, பப்பாளி மற்றும் மூங்கில் மரங்களுக்கும் ஏற்ற முறையாகும்.
வாழை வட்டம் அமைப்பது எப்படி?
வாழை பதிக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்து அதில் எத்தனை வாழை வட்டம் அமைக்க வேண்டுமோ அத்தனை வட்டங்களை சரியான இடைவெளிவிட்டு பிரிக்கவேண்டும். சரியான அளவில் பிரித்தபிறகு வட்டத்தின் மையப்பகுதியில் 5அடி விட்டம் கொண்ட வட்ட அளவில் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். தோண்டிய மண்ணை கொண்டு குழியை சுற்றிலும் 2 அடி அகலம் கொண்ட மேடாக குவிக்க வேண்டும்.வீட்டுத்தோட்டமாக இருந்தால் நீர் பாய்க்க ஒரு வாய்க்கால் மட்டும் வெட்டி குழியுடன் இணைத்துக்கொள்ளலாம். வாழைத்தோட்டமாக இருந்தால் நீர் பாய ஒரு வழியையும் நீர் வெளியேற ஒரு வழியையும் அமைத்துக்கொள்ளலாம். இப்போது வாழை வட்டத்திற்கான உரக்குழி தயார்.. அடுத்து என்ன செய்வது?
உரக்குழி
பொதுவாகவே வாழைக்கு அதிகம் ஊட்டம் தேவை,ஆகையால் அதற்கான ஊட்டத்தை தயாரிக்க மட்கக்கூடிய அனைத்துக்கழிவுகளையும் தழைக்கூளங்களையும் உரக்குழியில் குவித்து வைக்க வேண்டும். பின்னர் நீர்பாய்ச்சி வந்தால் உரக்குழி தயாராகிவிடும்.வாழை நடல்
குழியை சுற்றியுள்ள மேட்டின் நடுப்பகுதியில் சமமான இடைவெளியில் தேர்ந்தெடுத்த 5 முதல் 7 வாழைகளை ஆழமாக புதைக்க வேண்டும். வாழைக்கு அதிக நீர் தேவையாயினும் தேங்கியிருக்கக்கூடாது.வாழையின் வேர்கள் நீரைத்தேடி சென்று உறிஞ்சிக்கொள்ளும் திறனுடையவை. நடுவில் உள்ள உரக்குழியில் குப்பைக்கூளங்களை வேகமாக மட்க ஈரப்பதமும் நிழலும் தேவை அது இந்த அமைப்பில் கிடைத்துவிடும். உரம் வேகமாக தயாராக வாழையின் வேர்களும் உதவி புரியும்.
புதைத்த வாழைக்கன்றுகளுக்கிடையில் மேட்டின் ஓரக்காலில் இரண்டிரண்டு மரவள்ளிக்கிழங்கு(குச்சிக்கிழங்கு) குச்சிகளை நடவேண்டும். மேட்டின் ஓரக்கால்களில் நடப்படும் குச்சிக்கிழங்கு செடி வறட்சியை தாங்குவது மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து ‘வாழை வட்ட்த்திற்கு ஒரு பாதுகாப்பை தரும். வாழை தயாராகும் முன்னரே கிழங்கு அறுவடைக்கு வந்துவிடும்.
மரவள்ளிக்குச்சிக்கு முன்புறம் அதாவது குழியை நோக்கி வெட்டிவேர்ப்புல் பயிரிட வேண்டும். வெட்டிவேர்ப்புல்லானது ஆழமான வேரமைப்பால் மண்ணரிப்பை தடுக்கும் ,இதன் மூக்கைத் துளைக்கும் வாசனையானது பூச்சிகளையும் கொசுக்களையும் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது. ஒன்றரை மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புல் தாழ்ந்த காற்றினால் வரும் சேதத்தையும் தடுக்கிறது. எளிதில் வளரும் இந்தப்புல் இந்த அமைப்பிற்கான மட்கக்கூடிய வைக்கோலையும் தருகிறது.
அடுத்து சக்கரைவள்ளிக்கிழங்கு கொடியை வாழையை சுற்றி சமமான இடைவெளியில் ஊன்றிவிடவேண்டும். இந்த சர்க்கரைவள்ளிக்கொடிகள் இந்த வாழை வட்ட அமைப்பின் மூடாக்காக செயல்பட்டு தேவையற்ற களைகள் வளருவதை தடுக்கின்றன. இதனூடாக அல்லது இது அறுவடை செய்த பிறகு வேர்க்கடலை பயிரிடுவதும் நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலைபெறச்செய்ய உதவும். களையை கட்டுப்படுத்தவும் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் இவை இந்த அமைப்புக்கு உதவுகின்றன.
கடைசியாக உரக்குழியின் உள்வட்ட ஓரக்கால்களில் சேம்புக்கிழங்கு அடர்த்தியாக விதைக்க வேண்டும். உள்வட்டத்தில் ஈரமான சூழலில் வாழும் தாவரமான சேப்பங்கிழங்கு தழைக்கூளங்களை எளிதில் மட்கச்செய்யும் வல்லமை படைத்தவை.
உரக்குழியில் உபயோகப்படாத பெரிய மரக்கட்டைகள்,மரக்கிளைகளை அடிப்பகுதியில் இடுவது மட்கச்செய்யும் பூஞ்சைகளுக்கு ஏதுவாக இருக்கும். உரக்குழி எப்போதும் குப்பைகளால் குவிந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.குழிய விடக்கூடாது.இந்த ‘வாழை வட்டத்தில்’ வாடிய வாழை இலைகளையும், தார் ஈன்ற பிறகு வெட்டப்பட்ட மரங்களையும் மற்றும் கழிக்கப்பட்ட எடைக்கன்றுகளையும் வெளியே வீசாமல் உரக்குழியிலே இடுவது இந்த அமைப்புக்கு மேலும் உரம் சேர்ப்பதாகும். நாளடைவில் இந்த உரக்குழி எந்த குப்பையையும் எளிதில் மட்கச்செய்து உரமாக மாற்றி விடும் வல்லமை பெற்றுவிடும்.
banana circle |
இந்த ‘வாழை வட்ட கூட்டுக்குடும்ப அமைப்பு’ வாழையடி வாழையாக பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆற்றலுடையது.
துணைப்பயிர் கொண்டு செய்யும் விவசாயமே முழுமையான பாதுகாப்பான செலவில்லாத விவசாயமாகும். இப்படி செய்யப்படும் விவசாயத்திலும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அப்போது ஹோமியோபதி பயன்படும்.
படம் மற்றும் கருத்து உதவி:
treeyo permaculture edu
permaculture.com
https://www.facebook.com/groups/1464331126988383/permalink/1467850809969748/
#அக்ரோஹோமியோபதி
🍀
treeyo permaculture edu
permaculture.com
https://www.facebook.com/groups/1464331126988383/permalink/1467850809969748/
#அக்ரோஹோமியோபதி
🍀
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக