சனி, 3 செப்டம்பர், 2016

ஹோமியோபதி விவசாயம்




கரும்பும் கல்கேரியா கார்ப்பும்
போன வருடம் நண்பரின் கரும்புத்தோட்டத்தில் ஒரு ஏக்கர் கரும்பு மட்டும் அதன் தோகையில் வெள்ளை வெள்ளையாய் நிறமாற்றம் மற்றும் மாவு போன்ற வெண்படிவம் படிந்து வாடி போய்விட்டது.பொதுவாக கரும்பு வெட்டும் பருவத்தில் இது போல் நோய் தாக்கினால் சர்க்கரை எடை வராது என அந்த கரும்பை வெட்டாமல் எரித்துவிடுவர்.
இதை நண்பர் என்னிடம் சொன்னபோது நாம் ஏன் ஹோமியோபதியில் முயற்சி செய்து பார்க்கக்கூடாது என கரும்பின் குறிமொழிகளை ஆராய்ந்து கல்கேரியா கார்ப் 200 வீரியத்தில் தெளிக்க சொன்னேன். அவர் calc carb 200 dilution 100ml வாங்கி கரும்பிற்கு பாயும் பைப் தண்ணீரில் கலந்து பாய்ச்சி விட்டார்.நான் மாத்திரையை கலந்தால் போதும் என்று சொல்லியும் கேட்கவில்லை. அதற்கு பிறகு இதைப்பற்றியே நான் மறந்துவிட்டேன்,
பின் இரண்டு மாதங்களுக்கு பிறகு நண்பர் ஒரு கிலோ வெல்லம் கொண்டு வந்து எனக்கு கொடுத்தார்,என்ன விசேஷம் என கேட்டதில் கல்கேரியா கார்ப் விளைச்சல் மற்ற கரும்புகளை விட நன்றாக விளைந்து அதிக எடை சர்க்கரையை கொடுத்தது மட்டுமில்லாமல் விலை அதிகம் விற்க நல்ல நிறத்துடன் இருந்தது (விலை அதிகம் விற்க நல்ல நிறத்துடன் இருக்கவேண்டியது அவசியம்). தற்போது அவர் உரங்களை பயன்படுத்தாமல் கல்கேரியா கார்ப் பயன் படுத்தி இந்த வருட கரும்பு சாகுபடி செய்திருக்கிறார்.
ஹோமியோபதி க்கான பட முடிவு
சுண்ணாம்பு சத்து குறைவான நிலங்களுக்கு (good
fertilizer for lime-deficient soil)அருமையான உரமாகும் இந்த Calcium carbonicum 6X (கல்கோரியா கார்ப் கிளிஞ்சல் சிப்பியில் இருந்து வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகும்)
ஹோமியோபதி மருத்துவம் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்
ஹோமியோபதி இயற்கையுடன் இயைந்த மருத்துவம், அது மண்ணுக்கும் ,பயிர்களுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.
மேலும் இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மருத்துவம்,அதனால் கால்நடைகளுக்கும் அதனை கொடுக்கலாம்
விவசாயிகளுக்கு பயனுள்ள சில குறிப்புகளை மொழிபெயர்த்து கொடுத்துள்ளோம் ,மேலும் விவரம் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம்.
இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்து ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

1 கருத்து: